அதிகரிக்கும் போர் பதற்றம்! 7 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
ரஷ்யா- உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் கிளர்ச்சியாளர்களை அதிகம் கொண்ட கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார்.
மாஸ்கோவுடன் தனது படைகளை இந்த பகுதிகளுக்கு அனுப்பியுள்ள நிலையில், கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் ஸ்டாக் ஃப்யூசர்சில் சரிவு காணப்பட்டது, Brent crude futures சுமார் 4% உயர்ந்து $97.35 ஆனது.
இது செப்டம்பர் 2014 க்குப் பிறகு மிக உயர்ந்த அதிகரிப்பாகும். S&P 500 futures 2% சரிந்தது, Nasdaq futures 2.7% சரிந்தது.
ஐரோப்பிய பங்குகளும் ஒரே இரவில் 1.3% சரிந்து நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்தன.
ரஷ்ய ரூபிள் வீழ்ச்சியடைந்தது, ரஷ்யாவின் MOEX ஈக்விட்டி குறியீடு 10.5% சரிந்தது குறிப்பிடத்தக்கது.