உக்ரைனுக்கு Mirage 2000-5 போர் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் திட்டம்
பிரான்ஸ் 2025 முதல் பாதியில் உக்ரைனுக்கு Mirage 2000-5 போர் விமானங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இவ்விமானங்கள் மாறுபட்ட போர் மற்றும் மின்காந்த தற்காப்பு திறன்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
Mirage 2000-5 போர் விமானங்களை வழங்குவதன்மூலம் உக்ரைன் விமானப்படைக்கு ரஷ்யாவின் மேம்பட்ட விமானப்படையை எதிர்த்து போராட உதவும்.
இதற்காக பிரான்ஸ் ஏற்கனவே உக்ரேனிய விமானப் படை வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.
பிரான்ஸிடமிருந்து எத்தனை எண்ணிக்கையிலான Mirage 2000-5 போர் விமானங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ளன என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
மிராஜ் 2000-5 என்பது பிரெஞ்சு நிறுவனமான Dassault உருவாக்கிய ஒரு மல்டிரோல், ஒற்றை எஞ்சின் போர் ஜெட் ஆகும்.
இது நான்காம் தலைமுறை போர் விமானம் ஆகும். மிராஜ் 2000-5 என்பது உக்ரைன் இப்போது பயன்படுத்திவரும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களைப் போன்றதாகும்.
உக்ரைனுக்கு ஏற்கெனவே நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் F-16 போர் விமானங்களை வழங்கியுள்ளன.
இந்த விமானங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவை உக்ரைன் விமானப்படைக்கு சில நன்மைகளை வழங்குகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France Ukraine, Nato Ally France, France to send Mirage 2000-5 fighter jets to Ukraine