கிரிப்டோகரன்சியை அதிகமாக வைத்துள்ள நாடு எது தெரியுமா? இந்தியாவிடம் எவ்வளவு உள்ளது?
உலகிலேயே கரன்சியை அதிகமாக வைத்துள்ள நாடு உக்ரைன்.
ரஷ்ய படையெடுப்பால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் நேட்டோ அமைப்பு மற்றும் நட்பு நாடுகளின் உதவியுடன் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வரும் உக்ரைன் நாட்டின் வசம்தான் அதிக கிரிப்டோ கரன்சி உள்ளது என்பதை நம்ப முடிகிறதா! உண்மைதான்...
உக்ரைன் மக்களின் வசம் 12.7% இருப்பதாகவும், இதன் மூலம் அதிக டிஜிட்டல் கரன்சிகளை வைத்திருக்கும் மக்கள் பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது.
இதே இரண்டாவது இடத்தில் வெனிசுலா மக்களிடம் 10.3 சதவீதமும், சிங்கப்பூரில் 9.4 சதவீதமும், கென்யா வசம் 8.5 சதவீதமும், அமெரிக்காவிடம் 8.3 சதவீதமும் உள்ளன.
டிஜிட்டல் கரன்சி எனப்படும் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் சமீபத்திய ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்தியாவில் மத்திய அரசிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கப்படாத முன்பே இந்தியாவில் ஏராளமான மக்கள் கிரிப்டோகரன்சியை வாங்கி குவித்தனர்.
கோவிட் தொற்று பரவ ஆரம்பித்த பிறகு இந்த கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது பெரியளவில் ஏற்றம் கண்டது. ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் படி இந்திய மக்களின் வசம் 7 சதவீதத்திற்கும் மேலாக கிரிப்டோகரன்சிகள் உள்ளது.
2021-ம் ஆண்டில் கிரிப்டோகரன்சி வைத்திருக்கும் மக்கள் தொகையின் பங்கினை பொறுத்தவைரை, வளரும் நாடுகள் மொத்தம் 20 நாடுகளில் 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் ஐ நா வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.