உக்ரைன் ஊடுருவல் பிரித்தானியாவரை தொடரும்: புடின் ஆதரவாளர் மீண்டும் மிரட்டல்
பிரித்தானியாவிலுள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் ஒன்றை எட்டுவது வரை எங்கள் ஊடுருவல் தொடரும் என புடின் ஆதரவாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு மிரட்டல் விடுப்பதற்காகவே ஓவர்டைம் வேலை பார்க்கும் சிலர் ரஷ்ய தொலைக்காட்சியில் இருப்பது போல் தெரிகிறது.
எப்படியாவது பிரித்தானியாவை வம்புக்கு இழுத்து ஏதாவது மிரட்டல் விடுத்தால்தான் தங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும் என்பது போல அவ்வப்போது புடின் ஆதரவாளர்கள் சிலர் ரஷ்ய அரசு ஆதரவு தொலைக்காட்சியில் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
குறிப்பாக, பிரித்தானிய வெளியுறவுச்செயலரான Liz Truss, ரஷ்யாவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவிப்பதும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதுமாக இருப்பதால், அவர் பெயரைக் கேட்டாலே அப்படி எரிச்சல் வருகிறது ரஷ்யர்களுக்கு...
அவ்வகையில், சமீபத்தில் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் பேசிய புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர், உக்ரைன் ஊடுருவல் பிரித்தானியாவுக்குள் வரை தொடரும் என்பதுபோல பேசியிருக்கிறார்.
அவரிடம், ரஷ்யா எப்போது டான்பாஸ் மீதான ஊடுருவலை நிறுத்தும், ரஷ்ய ஊடுருவல் எந்த இடத்துடன் முடிவுக்கு வரும் என்று கேட்டபோது, ரஷ்யப்படைகள், பிரித்தானியாவிலுள்ள Stonehenge என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை அடைந்தபிறகுதான், ஊடுருவல் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், பிரித்தானிய வெளியுறவுச்செயலரான Liz Truss, தான்தான் போரை நடத்துவதாகக் கூறுகிறார் என்று அவர் கூற, கேலியாக சிரிக்கிறார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள்.
இந்த Vladimir Solovyovதான், பிரித்தானியா மீது அணுகுண்டு வீசி, அதை கற்காலத்தில் இருந்ததுபோல ஆக்கிவிடுவோம் என எச்சரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.