சிக்கிய படைவீரர்களின் உடல் உறுப்புக்களை சேகரிக்கிறதா உக்ரைன்?: கனேடிய உளவுத்துறை வெளியிட்டுள்ள பரபரப்பு
செய்தி உக்ரைனிடம் சிக்கிய ரஷ்யப் படைவீரர்களின் உடல் உறுப்புக்களை உக்ரைன் சேகரிப்பதாக கூறப்படும் செய்தி உண்மையானதல்ல என கனேடிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
தங்களிடம் சிக்கிய ரஷ்யப் படைவீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் உறுப்புக்களை உக்ரைன் சேகரிப்பதாக ரஷ்யா பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், உக்ரைனை ஊடுருவியதற்கு உலக அரங்கில் ஆதரவு திரட்டுவதற்காக ரஷ்யா அவ்வாறு செய்துவருவதாகவும் கனேடிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆதாரங்களை அழிப்பதற்காக, உறுப்புக்கள் அகற்றப்பட்ட உடல்களை எரிப்பதற்கு, நடமாடும் தகன வாகனங்களை உக்ரைன் பயன்படுத்துவதாகவும் ரஷ்யா தகவல் பரப்பி வருகிறது.
அத்துடன், ரஷ்யப் படைகள் உக்ரைனில் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், உக்ரைன் கூறுவது போல இல்லாமல் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களில் எண்ணிக்கை மிகவும் குறைவுதான் என்றும் பல பொய்யான தகவல்களை ரஷ்யா பரப்பி வருவதாகவும் கனேடிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.