ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால்.., பிரித்தானியாவை எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்
பிரித்தானியா மீது விளாடிமிர் புடின் அணுகுண்டு தாக்குதலை நடத்தினால், அதற்கேற்ப தற்செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேம்பிரிட்ஜ் கல்வியாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் நெருக்கடியின் விளைவாக அணுசக்தி யுத்தம் நடக்கு சாத்தியமில்லை என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அபாய ஆய்வு மையத்தில் (Centre for the Study of Existential Risk) ஆராய்ச்சியாளராக பணிபுரியும் பால் இங்க்ராம் (Paul Ingram) கூறுகிறார்.
அப்படி நடக்க 80-ல் ஒரு பங்கிற்கு தான் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அரசாங்க அதிகாரிகள் கடந்த கால பனிப்போர் திட்டங்கள் சிலவற்றை தூசு தட்டி வைத்துக்கொள்ளவேண்டும் என அவர் கூறுகிறார்.
ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்து அப்பாவி குடிமக்கள் மீது குண்டுகளை வீசுவதால், உக்ரைன் வான்வெளியை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட பகுதியாக அறிவிக்க மறுத்ததற்காக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நேட்டோவை சாடியுள்ளார்.
ஆனால், அத்தகைய ஒரு தடை நடவடிக்கை மூன்றாம் உலகப் போரைத் தூண்டக்கூடும் என்றும் அது நிச்சயம் 'அணு மற்றும் அழிவுகரமானதாக' இருக்கும் என்றும் கிரெம்ளின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் அச்சுறுத்தியுள்ளார்.
ஏதேனும் ஒரு சுழில் ரஷ்யா பிரித்தானியா மீது அணுவாயுத தாக்குதல் நடத்தினால் என்ன செய்யவேண்டும் என பால் இங்க்ராம் கூறியுள்ளார்.
அணுகுண்டு வீசப்பட்டால் வளிமண்டலத்தில் புகை மற்றும் புகை காரணமாக சூரிய ஒளி பல ஆண்டுகளாகத் தடுக்கப்படும்.
உணவு, தங்குமிடம், குடிநீர் மற்றும் எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு போன்ற முக்கிய சேவைகளை அரசு துறைகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
'கதிர்வீச்சு இருந்தால், சூரிய ஒளி குறைவாக இருந்தால் எந்த பயிர்கள் வளர சிறந்தவை? என்று நாம் முன்னெச்சரிக்கையாக சிந்திக்க வேண்டும்' என்றார்.
'நமக்குத் தேவையான விதைகளை விதை வங்கிகளில் முழுமையாக இருப்பு வைத்திருப்பதை எப்படி உறுதி செய்வது?' என்பதை சிந்திக்க வேண்டும்.
கடற்பாசி மற்றும் பூச்சிகள் சாத்தியமான உணவு ஆதாரங்களாக இருக்கலாம். கடற்பாசி குறைந்த வெளிச்சத்தில் வளரும், அதே சமயம் பூச்சிகள் புரதம் நிறைந்து 'கதிர்வீச்சுக்கு அதிக மீள் தன்மை கொண்டவை' என்று கூறினார்.
உயிர் பிழைத்தவர்கள் ஜீரணிக்க முடியாத தாவரப் பொருட்களை ஒரு காகித ஆலையில் பதப்படுத்தி, சர்க்கரையை உற்பத்தி செய்யும் நொதிகளுடன் கூழ் கலந்து உண்ணக்கூடிய பொருளாக மாற்றலாம் என்று ஆல்ஃபெட் கூறியுள்ளது.
இருப்பினும், உருளைக்கிழங்கு, கனோலா மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற பொதுவான உணவுகள் இன்னும் வளர்க்கப்படலாம் என பால் இங்க்ராம் கூறியுள்ளார்.