அமெரிக்காவுக்கு பதில் ரஷ்யாவுக்கு செல்லுங்கள்! கடும் எதிர்ப்பால் அவசரமாக வெளியேறிய ஜே.டி.வான்ஸ்
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு உக்ரைன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாதியிலேயே வெளியேறிய ஜெலென்ஸ்கி
வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelensky), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் சந்தித்து பேசினர்.
இதில் காட்டமான விமர்சனங்களை எதிர்கொண்டதால் ஜெலென்ஸ்கி பாதியிலேயே வெளியேறினார்.
இது அமெரிக்காவில் உள்ள உக்ரைன் ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் வெர்மான்ட் மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ரஷ்யாவுக்கு செல்லுங்கள்
அங்கு கூடிய உக்ரைன் ஆதரவாளர்கள், "அமெரிக்காவுக்கு பதிலாக ரஷ்யாவிற்கு சென்று பனிச்சறுக்கில் ஈடுபடுங்கள்" என்ற பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை ஜே.டி.வான்ஸுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், ஜெலென்ஸ்கியிடம் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஜே.டி.வான்ஸ் இருவரும் எல்லை மீறி நடந்துகொண்டதாகவும், அமெரிக்க குடிமக்கள் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் வேறொரு இடத்திற்கு அவசரமாக வெளியேறியதாக தகவல் தெரிவிக்கிறது.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகவிருக்கும் தீவிர வலதுசாரி தலைவர்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்
இதற்கிடையில், வெர்மான்ட் நகர ஆளுநர் பில் ஸ்காட் கூறுகையில், "துணை ஜனாதிபதி வான்ஸ் தனது குடும்பத்துடன் வெர்மான்ட் நகருக்கு சுற்றுலா வந்துள்ளார். அவருக்கு நகர மக்கள் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களை வரவேற்கும் நிர்வாகத்துடன் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |