ஜேர்மனி வழங்கிய கவச வாகனங்களை ஏற்க மறுத்த உக்ரைன்: காரணம் இதுதான்
உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கிய சில கவச வாகனங்களை உக்ரைன் ஏற்க மறுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
காரணம் இதுதான்
உக்ரைனுக்கு, ஜேர்மனியும், டென்மார்க்கும் கவச வாகனங்களை வழங்கியுள்ளன. ஆனால், அவற்றில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்துள்ளது. அதற்குக் காரணம், Leopard 1 tanks என்னும் அந்த கவச வாகனங்களில் சிலவற்றில், பல குறைபாடுகள் காணப்படுகின்றனவாம்.
Sean Gallup/Getty Images
கடந்த ஆண்டு உக்ரைனுக்கு வழங்கப்பட்ட கவச வாகனங்களை உக்ரைன் வீரர்கள் ஆராய்ந்தபோது, வழங்கப்பட்ட 20 கவச வாகனங்களில் 18இல் சில சிறிய பிரச்சினைகள் இருந்துள்ளன. இரண்டு கவச வாகனங்களில் மிகப்பெரிய பிரச்சினைகள் இருந்துள்ளன. சில கவச வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கிகள் சுடவே இல்லையாம். ஆகவே, வழங்கப்பட்ட கவச வாகனங்கள் எதையும் பயன்படுத்தவே முடியாது என்கிறது ஊடகம் ஒன்று.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |