புடின் பெண்ணாக பிறந்து இருந்தால்... பிரித்தானிய பிரதமர் தெரிவித்த பரபரப்பு கருத்து!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் மீது படையெடுத்திருக்க மாட்டார் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானிய அரசாங்கம் பல்வேறு ஆயுத உதவிகள் முதல் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் வரை விதித்து வருகிறது.
மேலும் இந்த ஆண்டுகான பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவினங்களின் தொகையில் சுமார் 1.3 பில்லியன் பவுண்ட்களை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.
#British PM @BorisJohnson says if #Putin were a woman he not have invaded #Ukraine.
— NEXTA (@nexta_tv) June 29, 2022
According to him, the "crazy, macho" invasion is a "perfect example of toxic masculinity".
?BBC pic.twitter.com/KBkzd2Amsi
இந்தநிலையில் ஐந்து மாதங்களை கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் நிறைவடையாத நிலையில், ரஷ்ய ஜனாதிபதி பெண்ணாக இருந்து இருந்தால் உக்ரைன் மீது படையெடுத்து இருக்கமாட்டார் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பவேரியாவில் நடைபெற்ற G7 செல்வந்த நாடுகளின் உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஜெர்மன் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான ZDFக்கு பேட்டி அளித்து பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், புடின் பெண்ணாக பிறந்து இருந்தால், கண்டிப்பாக தற்போது இல்லை, ஒருவேளை பெண்ணாக பிறந்து இருந்தால், பைத்தியக்காரத்தனமான மற்றும் வன்முறைப் போரில் அவர் ஈடுப்பட்டிருப்பார் என்று நான் நினைத்து இருக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் தற்போதைய செயல், முழுமையான மற்றும் நச்சுத்தன்மையான ஆண்மையின் எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு சம்மதம் தெரிவித்த துருக்கி...உற்சாகத்தில் நோட்டோ கூட்டணி
அத்துடன் பாலின சமத்துவம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசுகையில், அதிகார பதவிகளில் அதிக பெண்கள் இடம்பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.