நன்றியுணர்வு வேண்டும்... நாங்கள் அமேசான் நிறுவனம் அல்ல: ஜெலென்ஸ்கியின் முகத்தில் அறைந்த பிரித்தானியா
விளாடிமிர் புடினுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் ஆதரவுக்கு உக்ரைன் மேலதிக நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் பென் வாலஸ் கொந்தளித்துள்ளார்.
பிரித்தானியா அமேசான் அல்ல
உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கைகளை பட்டியலிட்ட பென் வாலஸ், இது இணையமூடாக அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்குவது போல எளிதானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
@getty
கடந்த கோடையில் 11 மணி நேரம் பயணப்பட்டு, உக்ரைன் கோரியிருந்த ஆயுதங்களை விநியோகிக்க சென்றதாகவும், அப்போது உக்ரைன் அதிகாரிகளிடம் தாம் அமேசான் நிறுவனமல்ல என குறிப்பிட்டதாக பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, பிரித்தானியாவுடனும், அங்குள்ள பிரதமருடனும், பெண் வாலஸ் உடனும் உக்ரைன் நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பென் வாலஸ் என்ன குறிப்பிடுகிறார் என்பது தமக்கு விளங்கவில்லை எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். நன்றியுணர்வு மிக்கவர்களாக எவ்வாறு இருக்க வேண்டும்? பென் வாலஸ் தமக்கு எழுதட்டும், அதன் படி நாங்கள் நடந்து கொள்கிறோம் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவிக்க வசதியாக இருக்கும்
காலையில் கண் விழித்ததும், அந்த அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வசதியாக இருக்கும் எனவும் ஜெலென்ஸ்கி காட்டமாக பதிலளித்துள்ளார். ஆனால் பென் வாலஸ் வெளிப்படுத்திய கருத்துக்கு பிரதமர் ரிஷி சுனக், விளக்கமேதும் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
@getty
மட்டுமின்றி, ஜெலென்ஸ்கி பல சந்தர்ப்பங்களில் பிரித்தானியாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார் என்றே சுனக் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த உக்ரைன் மக்களும் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிருக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடுகிறார்கள்.
தமது மக்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய ஜெலென்ஸ்கியின் நிலைப்பாடு புரிந்துகொள்ளத்தக்கது எனவும் பிரதமர் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |