ஜேர்மனிக்குச் செல்லும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியதன் பின்னணியில் இருப்பது உக்ரைனா?: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடினுடைய எதிரிகள் இருப்பதாக அமெரிக்க ஊடகம் ஒன்று பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட சதிச்செயல்
ரஷ்யாவையும் ஜேர்மனியையும் இணைக்கும் எரிவாயுக் குழாய்களில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி வெடிவிபத்து ஏற்பட்டது. அது வேண்டுமென்றே செய்யப்பட்ட சதி என கூறப்பட்டுவரும் நிலையில், தற்போது அமெரிக்க அதிகாரிகள் அந்த சதியின் பின்னணியில் புடினுடைய எதிரிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ஆதரவு அமைப்பு ஒன்று Nord Stream எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாக New York Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மனிக்குச் செல்லும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியதன் பின்னணியில் இருப்பது உக்ரைனா?
ஆனால், இந்த சதிச்செயலில் உக்ரைன் ஜனாதிபதியோ அல்லது உக்ரைன் அரசு அதிகாரிகளோ இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த சதிச்செயலில் பின்னணியில் இருப்பது ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய எதிரிகள் என்று மட்டுமே தெரிவித்துள்ள அதிகாரிகள், அவர்கள் யார் என்பதை விளக்கவில்லை.
எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியவர்கள் உக்ரைனியர்கள் அல்லது ரஷ்யர்களாக இருக்கலாம் என்று கூறியுள்ள அமெரிக்க அதிகாரிகள், ஆனால், நிச்சயமாக இந்த சதிச்செயலைச் செய்தது அமெரிக்கர்களோ அல்லது பிரித்தானியர்களோ அல்ல என்று கூறியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.