பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வீடியோ காணொளி மூலம் உரையாற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி
ரஷ்யாவின் போர் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் இந்த தருணத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வீடியோ காணொளி வாயிலாக இன்று உரையாற்றவுள்ளார்.
உக்ரைனை ரஷ்யா இன்றுடன் 13வது நாளாக தாக்கிவரும் நிலையில், உக்ரைனின் எதிர்த்து போராடும் திறனை கண்டு உலக தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை மெய்சிலிர்த்து நிற்கின்றனர்.
இந்த நிலையில் பிரித்தானியாவில் சட்டமியற்றும் உறுப்பினர்களின் சபையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என அழைக்கப்படும் நாடாளுமன்ற அவையில் இன்று மாலை 5 மணியளவில் உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி வீடியோ காணொலி வாயிலாக உரையாற்றவுள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் நாடாளுமன்ற அவையான வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் உரையாற்றவிருக்கும் முதல் வெளிநாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபரின் இந்த உரையை அனைவரும் புரிந்து கொள்வதற்கு வசதியாக 500 ஹெட்போன்கள் ஒரேநேரத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்பதற்கான வசதிகள் செய்யபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த பேசிய பிரித்தானிய நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உரையை கேற்பதற்கு ஆவலுடன் இருப்பதாகவும், இதற்கான வசதிகளை விரைவாக செய்து குடுத்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, பேசிய பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர், உக்ரைன் அதிபரின் உரை மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.