ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது: நாசவேலைக்கு திட்டமிட்டது அம்பலம்
உளவு பார்த்த குற்றச்சாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது
ஜேர்மனியின் பவேரியா(Bavaria) மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு தளவாட நிறுவனத்தின் ரகசியங்களை உளவு பார்த்து நாச வேலைகளுக்கு திட்டமிட்டதாக கூறப்படும் வழக்கில் உக்ரைன் நாட்டவர் ஒருவர் கைது ஜேர்மனியில் செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய நபர் என்றும், அவர் கடந்த ஜூன் மாதம் பவேரியாவிலுள்ள பாதுகாப்பு நிறுவனத்தின் வளாகங்களை புகைப்படம் எடுத்து வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு கொடுத்துள்ளார் என்று சந்தேகிப்பதாக மியூனிக் நகர வழக்கறிஞர்கள் மற்றும் பவேரியா காவல்துறையினர் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.

கிழக்கு துரிங்கியா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபரான 33 வயதுடையர் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை மியூனிக் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்த நிலையில், தற்போது அவர் பவேரியா நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயண அனுபவ தொகுப்பு
கைது செய்யப்பட்ட நபர் மீது நாசவேலையை செய்ய திட்டமிட்டு உளவு வேலையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் புதிதாக தொடங்கப்பட்ட GAZ-Hybrid அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உளவு வேலைக்கு உத்தரவிட்ட வெளிநாட்டு உளவு அமைப்பு எது என்பது குறித்து எந்தவொரு தகவலையும் அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
அத்துடன் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதால் கூடுதல் தகவல்கள் இப்போதைக்கு வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |