சுவிஸின் ஜெனிவாவை விட்டு வெளியேற உக்ரேனிய குடும்பத்திற்கு உத்தரவு!
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை விட்டு வெளியேறுமாறு உக்ரேனிய அகதி குடும்பத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மார்ச் மாத தொடக்கத்திலிருந்து உக்ரைனை சேர்ந்த 38 வயதான பெண் மற்றும் 8 மற்றும் 13 வயதுடைய அவரது இரண்டு மகன்கள் ஜெனிவாவில் வசித்து வருகின்றனர்.
Paquis-ல் தனக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கொடுக்கபட்டிருப்பதாகவும், தற்போதைக்கு அங்கு அவர் இலவசமாக வசித்து வருவதாகவும், தனது குழந்தைகள் பழக தொடங்குவதாக உக்ரேனிய பெண் கூறியுள்ளார்.
‘எஸ் அனுமதிக்கு’ விண்ணப்பிப்பதற்கு முன்பு உக்ரேனிய பெண் ஜெனிவாவில் அன்றாட வாழ்க்கையை தொடங்கியதே தற்போது பிரச்சனையாகியுள்ளது.
போரின் முதல் 2 மாதங்களில் ரஷ்யாவிற்கு 9.1 பில்லியன் யூரோ ஜேர்மனி செலுத்தியது அம்பலம்!
‘எஸ் அனுமதி’(S Permit), சுவிஸில் வேலை செய்யவும் சலுகைகளை பெறவும் அனுமதிக்கிறது. ஒவ்வொரு நாளும் 1,000 உக்ரைனியர்கள் S அனுமதிக்கு விண்ணப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஜெனிவாவில் வசித்து வரும் உக்ரேனிய குடும்பத்திற்கு, வாலாஸ் மாகாணத்தில் உள்ள சியோனில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால் அவர்கள் ஜெனிவாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உக்ரேனிய அகதிகளை நாடு முழுவதும் சமமாக அனுப்ப கூட்டமைப்பு மிகவும் ஆர்வமாக உள்ளதாம்.
இது கூட்டாட்சி விதி என்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஜெனிவா அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஜெனிவாவில் அகதிகளைக் கையாளும் ஹாஸ்பிஸ் ஜெனரலின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை, ஆனால் இது கடைசியாக இருக்குமா என்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளனர்.