பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சொத்து தொடர்புடைய தீ வைப்பு வழக்கு: உக்ரைனிய இளைஞர் கைது!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்களில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் உக்ரைனிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைனியர் கைது
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்களுடன் தொடர்புடைய தொடர் தீ விபத்துகள் சம்பவங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்தில் தீ வைத்ததாக கூறி 21 வயது இளைஞர் மீது முறையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு லண்டனின் சிடென்ஹாமில் வசிக்கும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ரோமன் லாவ்ரினோவிச் (வயது 21) என்பவர் இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
அவர் வெள்ளிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார் என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பெருநகர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு விசாரணையை முன்னெடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |