பிரித்தானியா அளித்த ஏவுகணையின் உதவியால் ரஷ்ய ட்ரோனை வீழ்த்திய உக்ரைன் வீரர்களின் கொண்டாட்டம்!
பிரித்தானியா தங்களுக்கு வழங்கிய ஏவுகணையின் உதவியால், ரஷ்ய ட்ரோன் ஒன்றை உக்ரைன் வீரர்கள் சுட்டு வீழ்த்தும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோவில், உக்ரைன் வீரர் ஒருவர், லேசர் உதவியுடன் குறிபார்க்கும் அந்த பிரித்தானிய ஏவுகணையைக் கொண்டு ரஷ்யாவுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்றை தாக்குவதைக் காணலாம்.
ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் அந்த ஏவுகணை ரஷ்ய ட்ரோனைத் தாக்கி வீழ்த்த, அந்த உக்ரைன் வீரரும், அவருடன் இருந்த சக வீரர்களும், கரவொலி எழுப்பியும் உற்சாகக் குரல் எழுப்பியும் ட்ரோனை வீழ்த்தியதைக் கொண்டாடுவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
பிரித்தானிய தயாரிப்பான Starstreak ஏவுகணை, ரஷ்யாவின் Orion என்னும் ட்ரோனை மிகத் துல்லியமாக தாக்கி வீழ்த்தியுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த ட்ரோன், அதிநவீன கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளதை வெளியாகியுள்ள புகைப்படத்தில் காணலாம்.
அந்த வீடியோவை வெளியிட்டுள்ள உக்ரைன் வீரர்கள், பிரித்தானியாவுக்கு நன்றி, கூட்டாளிகளின் உதவியை திறம்பட பயன்படுத்துகிறோம். எங்கள் விடுதலைக்காகவும், உங்கள் விடுதலைக்காகவும் கூடுதல் ஆயுதங்களை எங்களுக்கு வழங்குங்கள் என பிரித்தானியாவுக்கு ஒரு செய்தியையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.
[ESMMK