ரஷ்ய ஏவுகணைக்கு தப்பிய உக்ரேனிய தாயார்... பிரித்தானியாவில் கிடைத்த மறக்க முடியாத பரிசு

Russo-Ukrainian War Ukraine Ukrainian Refugee
By Arbin Aug 17, 2022 10:55 AM GMT
Report

பதுங்கு குழி ஒன்றில் பிள்ளை பெற்றெடுக்க விரும்பாததால் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்ததாக லீனா

ஒரு மாத காலம் நீண்ட புச்சா நகர தாக்குதலில் நூற்றுக்கணக்கானோரை ரஷ்யர்கள் கொன்று தள்ளியுள்ளனர்

உக்ரைனின் புச்சா நகர படுகொலைகளில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய கர்ப்பிணியான அகதி ஒருவர் பிரித்தானியாவில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் உக்ரேனின் புச்சா நகரில் ரஷ்ய துருப்புகள் கொடூர தக்குதலை முன்னெடுத்தது. ஒரே நாளில் பலர் கொல்லப்பட்டனர். நகருக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகள் குடியிருப்புகளையும் கட்டிடங்களையும் மொத்தமாக சிதைத்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். அதில் ஒருவர் கர்ப்பிணியான 37 வயது லீனா குலாகோவ்ஸ்கா. 36 வார கர்ப்பிணியாக இருந்த அவர் ஜூன் மாதம் நாட்டைவிட்டு வெளியேறினார்.

ரஷ்ய ஏவுகணைக்கு தப்பிய உக்ரேனிய தாயார்... பிரித்தானியாவில் கிடைத்த மறக்க முடியாத பரிசு | Ukrainian Refugee Bucha Massacre Gives Birth

@APEX

இந்த நிலையில், இவரது குழந்தை நிக்கோல் கடந்த மாதம் பிளைமவுத் மருத்துவமனையில் பிறந்தார். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள் படையெடுப்பை முன்னெடுத்தது.

போர் முடிவுக்கு வரும் என ஜூன் மாதம் வரையில் காத்திருந்ததாகவும், பதுங்கு குழி ஒன்றில் தாம் பிள்ளை பெற்றெடுக்க விரும்பாத காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் லீனா குலாகோவ்ஸ்கா தெரிவித்துள்ளார்.

18ல் இருந்து 60 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான ஆண்கள் எவரும் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதால், 39 வயதான தமது கணவர் உக்ரேனில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் லீனா குலாகோவ்ஸ்கா, தமது இரு பிள்ளைகளுடன் பிரித்தானியாவுக்கு புறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஏவுகணைக்கு தப்பிய உக்ரேனிய தாயார்... பிரித்தானியாவில் கிடைத்த மறக்க முடியாத பரிசு | Ukrainian Refugee Bucha Massacre Gives Birth

@APEX

தற்போது, பிரித்தானியாவில் இருந்து எங்கும் செல்ல தாம் தயாராக இல்லை எனவும், போர் முடிவுக்கு வந்த பின்னர், எதிர்காலம் பிரித்தானியாவிலா அல்லது உக்ரேனிலா என்பது முடிவெடுக்கப்படும் என்றார்.

ஒரு மாத காலம் நீண்ட புச்சா நகர தாக்குதலில் நூற்றுக்கணக்கானோரை ரஷ்யர்கள் கொன்று தள்ளியுள்ளனர். அப்பாவி மக்களின் சடலங்கள் வீதிகளில் காணப்பட்டதுடன், புதைக்கப்பட்ட நிலையிலும் கொத்தாக சடலங்கள் கைப்பற்றப்பட்டன.

சர்வதேச கவனத்தை ஈர்த்த புச்சா நகர படுகொலை தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US