கைவிட்ட பிரித்தானியருடன் ஒரே காரில் பயணித்த உக்ரைன் அழகி: ஒன்றுசேர்ந்துவிட்டீர்களா என கேட்டவர்களுக்கு அளித்த பதில்...
உக்ரைன் அழகிக்காக தன் துணைவியைக் கைவிட்ட பிரித்தானியர், அந்த உக்ரைன் பெண்ணையும் கைவிட்டுவிட்டார்.
தற்போது உக்ரைனுக்கே திரும்பிவிட்டார் அந்தப் பெண்.
உக்ரைன் அகதிக்காக, பத்து ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த துணைவியைக் கைவிட்ட பிரித்தானியர், பின்னர் அந்த உக்ரைன் பெண்ணையும் கைவிட்டுவிட்டார்.
ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு ஓடி வந்த சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண்ணுக்கு, Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29) மற்றும் அவரது துணைவியான லோர்னா (Lorna), தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
ஆனால், சோபியாவுக்கும் டோனிக்கும் பத்தே நாட்களில் காதல் பற்றிக்கொள்ள, லோர்னா தட்டிக்கேட்க, இதுதான் வாய்ப்பு என மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் டோனி.
ஆனால், டோனி சோபியா காதல் நான்கு மாதங்கள் கூட நீடிக்கவில்லை. புதுக்காதலி சோபியாவையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டார் டோனி.
இந்நிலையில், நேற்று சோபியாவும் டோனியும் ஒன்றாக ஒரே காரில் ஒன்றாக பயணிப்பதைக் கண்டவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர், நீங்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்துவிட்டீர்களா என்று டோனியிடம் கேட்டுள்ளார். அதற்கு டோனி இல்லை என்று பதிலளித்துள்ளார்.
ஆனால், விடயம் அத்துடன் முடியவில்லை. எங்களைக் குறித்து பத்திரிகையில் படித்திருக்கிறீர்களா என்று அந்த நபரிடம் கேட்டுள்ளார் டோனி. அதற்கு அவர், நான் மட்டுமா, எல்லோருமே உங்களைக் குறித்து படித்திருக்கிறோமே என்று சொல்ல, குஷியாகிவிட்டாராம் டோனி.
அதாவது தன்னை இப்போது ஒரு பிரபலம் போல கருதுகிறார் டோனி!
ஆனால், அந்தப் பெண் சோபியாவின் நிலைமைதான் மோசம். புது வாழ்வு கிடைத்திருக்கிறது என்று நம்பிய அந்தப் பெண், இப்போது பிரித்தானியாவை விட்டே வெளியேறுகிறார். அவருக்கு விமான நிலையத்தில் விடை கொடுக்கத்தான் டோனி அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
ஐந்து மாதங்கள் முன் எந்த விமான நிலையத்திலிருந்து சோபியாவை டோனி அழைத்துவந்தாரோ, அதே விமான நிலையத்தில் அவருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார் அவர்.
Credit: Enterprise
ஆம், சோபியா பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்டார். போலந்துக்கு விமானத்தில் செல்லும் அவர், அங்கிருந்து மீண்டும் தான் விட்டு வந்த உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கே செல்கிறார்.
விமானம் ஏறும் முன், சோகமும் குழப்பமுமாக, கடைசியாக பிரித்தானியாவில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவிலும் வாழமுடியாமல், பிரித்தானியாவை விட்டுச் செல்லவும் மனமில்லாமல், இருமனதுடன், உடைந்த உள்ளத்துடன் உக்ரைன் புறப்பட்டுள்ளார் சோபியா!