வாழ்க்கையின் மிக மோசமான நாள்... உக்ரேனிய பெண்ணால் விசாரணைக்கு இலக்கான பிரித்தானிய தாயார்
விதிகளின்படி ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை என ஹன்னா டெபன்ஹாம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தம்மை அடிமையாக நடத்துகிறார் என குறிப்பிட்டு, அந்த உக்ரேனிய பெண் அதிகாரிகளிடம் புகார்
பிரித்தானியாவில் அடைக்கலம் அளித்த தாயாருக்கு எதிராக உக்ரேனிய பெண் ஒருவர் அடிமையாக நடத்துகிறார் என புகார் அளித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சசெக்ஸ் பகுதியை சேர்ந்த 42 வயது ஹன்னா டெபன்ஹாம் என்பவரே தொடர்ந்து இரண்டு மாத காலம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். ஒவ்வொருமுறையும் காவல்துறை விசாரணைக்கு உட்பட்ட நாட்கள், தமது வாழ்க்கையின் மிக மோசமான நாள் என ஹன்னா டெபன்ஹாம் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனிய அகதியை தமது குழந்தைகளுக்கான காப்பாளராக பயன்படுத்திக் கொண்டதாகவும், உரிய விதிகளின்படி ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் ஹன்னா டெபன்ஹாம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், மொத்தமும் பொய் என கூறியுள்ள ஹன்னா, வெறும் மூன்று வாரங்கள் மட்டுமே தம்முடன் அந்த உக்ரேனிய அகதி தங்கியிருந்ததாகவும், பரிதாபப்பட்டு அவருக்கு தாம் அடைக்கலம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Credit: Facebook
அந்த 36 வயது உக்ரேனிய அகதியை இணைய பக்கம் ஊடாகவே அறிந்து கொண்டுள்ளார் ஹன்னா. ஆங்கில மொழி ஆசிரியரான அவர், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஹன்னாவின் 10 வயது பெண் பிள்ளையை கவனித்துக்கொள்ளவும், பதிலுக்கு தங்கும் அனுமதியும் வாரம் 200 பவுண்டுகள் ஊதியமும் அளிக்க ஹன்னா ஒப்புக்கொண்டுள்ளார்.
முதல் சில நாட்கள் எந்த சிக்கலும் இல்லாமல் சென்றுள்ளது. ஆனால், அவர் பயன்படுத்திய பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்ய ஹன்னா அந்த உக்ரேனிய பெண்மணியிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதுடன், கண்டுகொள்ளவும் இல்லை என ஹன்னா கூறியுள்ளார்.
பலமுறை எடுத்துக் கூறியும் அந்த உக்ரேனிய பெண்மணி கண்டுகொள்ளவில்லை, மாறாக அவர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தான், தம்மை அடிமையாக நடத்துகிறார் என குறிப்பிட்டு, அந்த உக்ரேனிய பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து இரண்டு மாத காலம் விரிவான விசாரணைக்கு பின்னர், போதிய ஆதாரங்கள் இல்லை என அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
பரிதாபப்பட்டு அடைக்கலம் அளித்த தமக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை குறித்த உக்ரேனிய பெண் அளித்ததாக ஹன்னா தெரிவித்துள்ளார்.