சுவிட்சர்லாந்தை விட்டு உக்ரைன் அகதிகள் வெளியேற உத்தரவு... அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல்
போருக்குத் தப்பி வந்த உக்ரைன் அகதிகள் போர், முடியும் முன்னரே சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஒரு தகவல் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சுவிஸ் புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி கூறப்பட்டுள்ளது.
நாடுகடத்தப்படும் நிலை உருவாகும் முன், 3,000 சுவிஸ் ஃப்ராங்குகள் தருகிறோம், வாங்கிக்கொண்டு நீங்களாகவே அவரவர் தங்கள் ஊரைப் பார்த்து போய்விடுங்கள், ஏனென்றால், சுவிட்சர்லாந்தில் உங்களுக்கு புகலிடம் கிடைக்கும் வாய்ப்பு குறைவே என்கிறது எந்த வீடியோ.
சுவிட்சர்லாந்தில் வாழும் உக்ரைன் நாட்டவரான சட்டத்தரணியான Elina Iakovleva என்பவர், எப்போதும் குண்டு மழை பொழியப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நாட்டுக்கு, எப்போது வேண்டுமானாலும் பெண்கள் வன்புணரப்படும் அபாயம் உள்ள ஒரு நாட்டுக்கு, திரும்பிச் செல்லுங்கள் என பெண்களையும் குழந்தைகளையும் எப்படி சுவிஸ் புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் பரிந்துரைக்க முடியும்? என கேள்வி எழுப்புகிறார்.
இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள செய்தி இழிவானது, கொடூரமானது என்கிறார் அவர்.