உக்ரைனிய அகதிகள் தங்கியிருந்த...400 ஆண்டு பழமை வாய்ந்த பிரித்தானிய ஹோட்டலில் தீ விபத்து
பிரித்தானியாவில் உக்ரைனிய அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டலில் தீ விபத்து
பிரித்தானியாவின் தெற்கு பகுதியான சசெக்ஸில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் என்று அழைக்கப்படும் ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த ஹோட்டலில் உக்ரைனிய அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீ விபத்தில் ஹோட்டலின் பக்கத்து கட்டிடத்திலும் தீ பரவியதாக கூறப்படுகிறது.
மீட்பு பணி
சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் ஹோட்டலில் ஏற்பட்ட தீயை அணைக்க செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.