போருக்கு மத்தியில் ஜேர்மனிக்கு வந்துள்ள உக்ரைன் படைவீரர்கள்... காரணம் இதுதான்
உக்ரைனில் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் படையினர் சிலர் ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள்.
60 உக்ரைன் வீரர்கள் போருக்கு மத்தியில் மேற்கு ஜேர்மனியை வந்தடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..
அவர்கள் வந்த நோக்கம் என்னவென்றால், ஜேர்மனி உக்ரைனுக்கு உதவியாக ஏழு தானியங்கி howitzer 2000 என்னும் ஆயுதங்களை வழங்க உள்ளது. ஆனால், அந்த ஆயுதங்களை உடனடியாக யாரும் பயன்படுத்திவிடமுடியாது. அதற்கு முறையான பயிற்சி வேண்டும்.
ஆகவேதான், அந்த howitzer 2000 ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்வதற்காக அந்த 60 உக்ரைன் வீரர்களும் ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள்.
அந்த 60 படைவீரர்களுடன், தொழில்நுட்பக் கலைஞர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் வந்துள்ளார்கள்.
இந்த பயிற்சி சுமார் 40 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
அதற்குப் பிறகு, அந்த howitzer 2000 ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஜேர்மன் தயாரிப்பான இந்த howitzer 2000 ஆயுதம் ஒன்றைப் பிரயோகிக்க, ஐந்து படைவீரர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022