இளம் உக்ரேனிய சாரதியின் கொடுஞ்செயல்: கண்ணீரில் தத்தளிக்கும் 7 குடும்பம்
*ஜார்ஹெட்ஸ் மோட்டார் சைக்கிள் கிளப்பைச் சேர்ந்த 7 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டனர்
*நியூ ஹாம்ப்ஷயர் கவர்னர் கிறிஸ் சுனுனு, தீர்ப்பு 'எப்போதும் ஏற்கமுடியாத சோகம்' என்றார்.
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உக்ரேனிய சாரதியால் 7 மோட்டார் சைக்கிள் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பனது, அந்த 7 பேர் குடும்பங்களையும் மொத்தமாக நொறுக்கியுள்ளது.
குறித்த தீர்ப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
@AP
குற்றவிடுதலை பெற்றுள்ள 26 வயது உக்ரேனிய சாரதி, தற்போது நாடுகடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ளார். ஆனால், குறித்த தீர்ப்பு வெளியானதும், அதுவரை கலக்கத்துடன் காணப்பட்ட உக்ரேனிய சாரதி வோலோடிமிர் ஜுக்கோவ்ஸ்கி, கண்ணீரைத்துடைத்துக் கொண்டு, வானத்தை அண்ணார்ந்து பார்த்து நன்றி கூறியுள்ளார்.
நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தின் ராண்டால்ஃப் நகரில் 2019 ஜூன் மாதம் 21ம் திகதி அதிர்ச்சியை ஏற்படுத்திய குறித்த சாலை விபத்து சம்பவம் நேர்ந்தது. இதில் ஜார்ஹெட்ஸ் மோட்டார் சைக்கிள் கிளப்பை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
@AP
இந்த சம்பவத்தில் கைதான உக்ரேனிய லொறி சாரதி வோலோடிமிர் ஜுக்கோவ்ஸ்கி. அப்போதிருந்தே சிறையில் இருந்து வருகிறார். மாகாணத்தை மொத்தமாக உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பிலான தீர்ப்பில், உக்ரேனிய சாரதி குற்றவிடுதலை பெற்றுள்ளது, மாகாண ஆளுநர், விபத்தில் உயிர் தப்பியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
பலியான ஏழு பேர்களுக்கும் நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றே குடும்பத்தினர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளனர். போதைக்கு அடிமையான ஒரு இளம் சாரதி, ஏழு பேர்களை தமது வாகனத்தால் மோதி கொன்றுவிட்டு, தற்போது சர்வசாதாரணமாக குற்றவிடுதலை பெற்றுள்ளது நம்பும்படியாக இல்லை என மாகண ஆளுநர் Chris Sununu கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
@AP
வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே நடந்த நீதிமன்ற விசாரணைக்கு பின்னர், நீதிபதி தமது தீர்ப்பை வெளியிட 3 மணி நேரத்திற்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டுள்ளார்.
விபத்து நடந்த அன்று உக்ரேனிய சாரதி ஹெராயின், ஃபெண்டானில் மற்றும் கோகோயின் ஆகியவற்றை எடுத்துக்கொண்டார் என்பது நீதிமன்ற விசாரணையிலும் மருத்துவ சோதனையிலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
@AP