இங்கிலாந்தின் மிகப்பெரிய நாய்: வெளியான தகவல்
ஒரு குட்டி யானைக்கு நிகரான எடையுடன் இங்கிலாந்தின் மிகப்பெரிய நாய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஒரு சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இங்கிலாந்தின் மிகப்பெரிய நாய்
இங்கிலாந்தில் ஒரு துருக்கிய மலாக்லி என்ற நாய் இருகின்றது. அந்த நாயானது 7 அடி 2 அங்குலத்தில் காணப்படும்.
ஆகவே இந்த நாயானது இங்கிலாந்தின் மிகப்பெரிய நாய் என்று வர்ணிக்கப்படுகிறது.
இதன் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இரண்டு வயதான இந்த நாய் ஒரு நாளைக்கு 3 கிலோ இறைச்சியை உட்க்கொள்ளும்.
அதாவது ஒரு முழு கோழி, மூன்று முழு கானாங்கெளுத்தி, இரண்டு முட்டைகள் மற்றும் பச்சை நாய் உணவு என்பவையை எடுத்துக்கொள்ளும்.
இந்த நாய்க்கு ஒரு நாள் உணவு செலவு மாத்திரமே இந்திய பணத்திற்கு ரூ. 1116.55 செலவாகும். ஒரு வருடத்திற்கு கணக்கு பார்த்தால் சுமார் ரூ. 406018.61 செலவாகும் நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |