பிரான்ஸின் உயரிய விருது., உலகப்போர் வீரர்., பிரித்தானியாவின் பெருமைக்குரிய நபர் மரணம்
பிரித்தானியாவின் மூத்த இரண்டாம் உலகப் போர்வீரரும், நாட்டின் மிக வயதான மனிதருமான டொனால்டு ரோஸ் (Donald Rose) 110 வயதில் மரணமடைந்துள்ளார்.
1914-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் திகதி முதல் உலகப் போருக்குப் பிறகு பிறந்த ரோஸ், 23-வது வயதில் இராணுவத்தில் சேர்ந்து வட ஆப்பிரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
போரில் பங்கு
1944-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் திகதி நடந்த D-Day யுத்தத்தில் பங்கேற்றார். அதேபோல், ஜேர்மனியில் உள்ள Bergen-Belsen Concentration Camp-ஐ விடுவிக்க உதவிய பெருமை அவருக்கு உண்டு.
மரண செய்தியை உறுதி செய்த எரிவாஷ் நகர சபை தலைவர் ஜேம்ஸ் டாசன், “அவர் ஒரு உண்மையான போர்வீரர்” என்றும், “எரிவாஷ் அவரை ஒரு குடிமகனாகக் கொண்டிருந்தது பெருமையாகும்” என்றும் தெரிவித்தார்.
பிரான்ஸின் உயரிய விருது
அவரது சேவைக்காக பிரான்ஸின் உயரிய விருதான Legion d’Honneur வழங்கப்பட்டது.
மேலும், அவர் Victory in Europe Day-யின் 80-வது ஆண்டுவிழாவில் 45 போர் வீரர்களுடன் தேசிய நினைவிடத்தில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.
அங்கு உரையாற்றிய ரோஸ், “VE Day-யில் நான் கொண்டாடவில்லை. அப்போது நான் Belsen-இல் இருந்தேன். போரின் முடிவால் நிம்மதி வந்தது,” என்றார்.
வெஸ்காட் கிராமத்தைச் சேர்ந்த ரோஸின் மறைவு, ஒரு காலத்தையே முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Donald Rose WWII veteran death, UK oldest man dies at 110, Bergen-Belsen liberator Donald Rose, WWII veterans Britain news, Donald Rose D-Day hero death