பிரித்தானியா மகாராணி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பு எப்போது.. எங்கே? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரித்தானியா ராணி எலிசபெத் ஜூன் 13 அன்று விண்ட்சர் கோட்டையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடனை சந்திப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
ஜி-7 உச்சிமாநாட்டிற்காக இம்மாதம் பிரித்தானியாவுக்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானியா மகாராணியை சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியான நிலையில், சந்திப்பு நடைபெறும் திகதி இடம் குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து Cornwall நடக்கவிருக்கும் ஜி-7 உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜூன் 14 அன்று நேட்டோ கூட்டத்திற்காக Brussels-க்குச் செல்வதற்கு முன்பு, பைடன் மற்றும் மனைவி ஜில் ஆகியோரின் ஜூன் 13ம் திகதி பிரித்தானியா மகாராணியை சந்திக்கின்றனர்.
The Queen will meet the President of the United States of America and First Lady Jill Biden at Windsor Castle on Sunday, 13th June 2021. pic.twitter.com/GPJLYwFzyr
— The Royal Family (@RoyalFamily) June 3, 2021
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ஜோ பைடன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது.
95 வயதான பிரித்தானியா மகாராணியை சந்திக்கும் 13 வது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி தனது 69 ஆண்டுகால ஆட்சியில் சந்திக்காத ஒரே அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் ஆவர், அவர் பதவியில் இருந்த காலத்தில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் தனது கணவரும் இளவரசருமான பிலிப் 99 வயதில் இறந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் தான் பிரித்தானியா மகாராணி பணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.