லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே காதலியை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்த சிறை நிர்வாகம்!
லண்டன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அசாஞ்சே திருமணம் செய்து கொள்ள சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
அசாஞ்சே ஈகுவடாருக்கு ஸ்டெல்லா மோரிஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த ஜோடிக்கு 2 மற்றும் 4 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.
இவர் பிரித்தானியாவில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை அமெரிக்கா நாடு கடத்தி அவரை தண்டிக்க முனைப்பு காட்டி வருகிறது. அசாஞ்சே ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்தபோது அவருக்கும் தென்ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த பெண் வழக்கறிஞரான ஸ்டெல்லா மோரிஸ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த ஜோடிக்கு 2 மற்றும் 4 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே தனது காதலியை திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் இதுகுறித்து சிறை அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் சிறை ஆளுநர் மற்றும் நீதித்துறை செயலாளர் ஆகிய இருவரும் தங்களின் திருமணம் நடைபெறாமல் தடுக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஸ்டெல்லா மோரிஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
அதன் பின், அசாஞ்சே மற்றும் ஸ்டெல்லா மோரிஸ் ஆகிய இருவரும் சிறையில் திருமணம் செய்து கொள்ள சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.
இதனை உறுதி செய்துள்ள ஸ்டெல்லா மோரிஸ் இனி தங்களின் திருமணத்தில் எந்த குறுக்கீடும் இருக்காது என நம்புவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், இருவரின் திருமணம் நடைபெறும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.