உலக சந்தைகளில் பிரீமியம் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் இந்திய நிறுவனம்
பெங்களூரை தளமாகக் கொண்ட Ultraviolette Automotive நிறுவனம், தனது பிரீமியம் மின்மோட்டார் சைக்கிள்களை உலக சந்தைகளில் அறிமுகம் செய்யத் தயாராக உள்ளது.
உற்பத்தி ஒப்புதல்கள் மற்றும் பைலட் சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த பின், இந்நிறுவனம், உயர் செயல்திறன் கொண்ட இந்திய தயாரிப்பு மின்மோட்டார் சைக்கிள்களை சர்வதேச அளவில் விற்பனை செய்யும் முதல் நிறுவனம் ஆகும்.
“இம்மாதம் துருக்கியில் உள்ள இஸ்தான்புலில் ரீடெய்ல் விற்பனையை தொடங்கவுள்ளோம். இதை தொடர்ந்து ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் விற்பனை தொடங்கப்படும்,” என நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நாராயண் சுப்ரமணியம் தெரிவித்தார்.
2025-க்குள் இந்தியாவின் முழுமையான சந்தையை கவரும் நோக்கில் இருக்கின்ற Ultraviolette, அடுத்த ஆண்டில் இத்தாலி உள்ளிட்ட தென் ஐரோப்பாவின் ஆறு முக்கிய நாடுகளில் தனது வியாபாரத்தை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
உலகளாவிய விரிவாக்கம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிறுவனம் தனது மின்சைக்கிள்களுக்கான உலகளாவிய விரிவாக்கத்தைத் திட்டமிட்டு, கடந்த ஆறு மாதங்களில் ஐரோப்பாவின் கடினமான சூழல்களில் சோதனை செய்து வந்துள்ளது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கின் மீது 190 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளது. இது சமூக ஊடகங்கள் மூலமாகவே ஏற்பட்டது. சமூக ஊடகங்கள் மூலமாக எங்களின் பிராண்ட் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என நாராயண் சுப்ரமணியம் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |