ரேடார் தொழில்நுட்பத்துடன் களமிறங்கிய Ultraviolette X-47 Venom - உலக கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் புதிய மின்சார பைக்
Ultraviolette X-47 Venom Debuts With Radar Tech: இந்தியாவின் புதிய மின்சார பைக்கான Ultraviolette X-47 Venom உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
EICMA 2026-ல் Ultraviolette X-47 Venom
இந்திய மின்சார இருசக்கர வாகன தயாரிப்பாளரான Ultraviolette நிறுவனம், தனது புதிய X-47 Venom மின்சார மோட்டார் சைக்கிளை ஐரோப்பாவின் பிரபல மோட்டார் கண்காட்சியான EICMA 2026-ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியாகியுள்ள இந்த பைக், உலகளாவிய இருசக்கர வாகன சந்தையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

X-47 Venom மாடல், நிறுவனத்தின் புதிய 100-வோல்ட் VX-100 கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 11 kWh பேட்டரி மற்றும் Lightfury மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பைக் அதிகபட்சமாக சுமார் 40 ஹார்ஸ்பவர் சக்தியை வழங்கக்கூடியது. மேலும், 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 5.9 விநாடிகளில் எட்டக்கூடிய திறனும் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப அம்சங்கள்
இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சம் அதன் பாதுகாப்பு தொழில்நுட்பங்களாகும். UV Hypersense எனப்படும் அமைப்பின் மூலம் பின்புற ரேடார் செயல்பட்டு, Blind Spot Detection, Lane Change Assist, Overtaking Alert மற்றும் Rear Collision Warning போன்ற அம்சங்களை வழங்குகிறது.

மேலும், Sony சென்சர்களுடன் கூடிய முன் மற்றும் பின்புற dash camera-க்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் Bosch Dual-Channel ABS, Traction Control, Dynamic Stability Control, Cruise Control, 10 நிலை Regenerative Braking மற்றும் 7 அங்குல Touchscreen உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
விலை
சுமார் 8,450 யூரோ (9,300 அமெரிக்க டொலர்) அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மின்சார பைக், இந்திய உற்பத்தியாளர்களும் உலக தரத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் 2027 தொடக்கத்தில் விநியோகம் தொடங்கும் என Ultraviolette தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |