குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு சத்தான கருப்பு உளுந்து சட்னி.., எப்படி செய்வது?
Ulundhu Chutney Recipe- கருப்பு உளுந்து நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய ஒரு பாரம்பரிய உணவுப் பொருளாகும்.
உளுந்து புரதம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு பாரம்பரியமான ஊட்டச்சத்து மிக்க உணவு.
பெண்களின் ஆரோக்கியம், எலும்பு வலுவடைவது, நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் செரிமானத்திற்கு இது மிகவும் நல்லது.
மேலும், கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், கருப்பு உளுந்தை பயன்படுத்தி சத்தான சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 3 ஸ்பூன்
- பூண்டு- 6 பல்
- தக்காளி- 2
- காய்ந்த மிளகாய்- 5
- வெல்லம்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கருப்பு உளுந்து, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் அதில் வெல்லம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதனை ஆறவைத்து உப்பு சேர்த்தது மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் சுவையான கருப்பு உளுந்து சட்னி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |