உடலை இரும்பாக்கும் சத்தான உளுந்தங்களி: எப்படி செய்வது?
உளுந்தைகளி சாப்பிடுவதனால் உடலுக்கு மற்றும் எலும்புக்கு வலிமை தரவும், கர்பப்பை வலு பெறவும் உதவுகின்றன.
உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று.
ஆரோக்கியம் நிறைந்த உளுந்தங்களி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 1 கப்
- அரிசி- ¼ கப்
- கருப்பட்டி- 200g
- நல்லெண்ணெய்- ½ கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் அரிசி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து இரண்டையும் ஆறவைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும்வரை கொதிக்கவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவு அரைத்த மா சேர்த்து அதில் கருப்பட்டி நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் கெட்டியாகி வந்ததும் நல்லெண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி நன்கு கெட்டியாகி வந்ததும் பரிமாறினால் ஆரோக்கியமான உளுந்தங்களி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |