உடலிற்கு சத்தான வெள்ளை உளுந்து களி.., எப்படி செய்வது?
உளுந்து களி சாப்பிடுவதனால் உடலுக்கு மற்றும் எலும்புக்கு வலிமை தரவும், கர்பப்பை வலு பெறவும் உதவுகின்றன.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த வெள்ளை உளுந்து களி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெல்லம்- 1 கப்
- உளுந்து- 1 கப்
- ஏலக்காய்- 2
- உப்பு- 1 சிட்டிகை
- நல்லெண்ணெய்- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் உளுந்து சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த உளுந்து, ஏலக்காய், உப்பு சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் கரைத்த வெல்லம் மற்றும் அரைத்த மாவு சேர்த்து நன்கு கலந்து கெட்டியாகி வரும்வரை மிதமான தீயில் கிளறவும்.
பின்னர் அவ்வப்போது நல்லெண்ணெய் சேர்த்து ஒட்டாமல் வரும்வரை கிளறி இறக்கினால் சத்தான வெள்ளை உளுந்து களி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |