உடலிற்கு வலு சேர்க்கும் சத்தான கருப்பு உளுந்து லட்டு.., இலகுவாக செய்வது எப்படி?
கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், கருப்பு உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான லட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- ½ கப்
- வெள்ளை உளுந்து- ½ கப்
- பொட்டுக்கடலை- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- நாட்டு சர்க்கரை- 2 கப்
- நல்லெண்ணெய்- 1கப்
- நெய்- 3 ஸ்பூன்
- முந்திரி பருப்பு- 10
செய்முறை
முதலில் கருப்பு உளுந்து மற்றும் வெள்ளை உளுந்தை நன்கு கழுவி காயவைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் வறுத்த உளுந்தை ஆறவைத்து அதனுடன் பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை மற்றும் ஏழைக்கை தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அடுத்து இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நல்லெண்ணெய் மற்றும் நெய்யில் வறுத்து முந்திரியை சேர்த்து உருண்டையாக பிடிக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பு உளுந்து லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |