உடல் வலுவிற்கு சாத்தான உளுந்து பணியாரம்.., எப்படி செய்வது?
உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், உடல் வலுவிற்கு சாத்தான உளுந்து பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- ½ கப்
- பச்சரிசி- 3 ஸ்பூன்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- கேரட்- 1
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்து, அரிசி சேர்த்து 2 முறை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.

இதற்கடுத்து இதில் நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் உப்பு சேர்த்து கலந்து அரைத்த மாவில் சேர்த்து கிளறவும்.
இறுதியாக பணியார சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மாவை ஊற்றி சுட்டு எடுத்தால் சத்தான உளுந்து பணியாரம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |