உடல் எலும்பு வலுப்பெற கருப்பு உளுந்து பாயாசம்.., எப்படி செய்வது?
கருப்பு உளுந்து புரதம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு பாரம்பரியமான ஊட்டச்சத்து மிக்க உணவு.
பெண்களின் ஆரோக்கியம், எலும்பு வலுவடைவது, நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் செரிமானத்திற்கு இது மிகவும் நல்லது.
அந்தவகையில், உடல் எலும்பு வலுப்பெற கருப்பு உளுந்து பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 3 ஸ்பூன்
- பச்சரிசி- 1 ஸ்பூன்
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- பாதாம்- 5
- முந்திரி- 5
- தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கருப்பு உளுந்து, பச்சரிசி சேர்த்து வறுத்து ஆறவைத்து பின் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த மாவை தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து அகில் ஒரு கப் தண்ணீர் மற்றும் கரைத்த மாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
கெட்டியாகி வந்ததும் அதில் வெல்லக்கரைசல் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
இறுதியாக இதில் ஏலக்காய் தூள், நெய்யல் வறுத்த பாதாம், முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கருப்பு உளுந்து பாயாசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |