உடல் எலும்பு வலுப்பெற உதவும் உளுந்து சோறு.., எப்படி செய்வது?
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், கருப்பு உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான உளுந்து சோறு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்தம் பருப்பு- ¾ கப்
- வெந்தயம்- ¼ ஸ்பூன்
- அரிசி- 1 கப்
- தேங்காய்- ½ மூடி
- பூண்டு- 5 பல்
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் கருப்பு உளுந்தை கடாயில் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வாசனை வெளிவரும் வரை வறுக்கவும்.
அடுத்து அதே வாணலில் வெந்தயம் போட்டு வறுக்கவும்.
பின் வறுத்த உளுந்து, வெந்தயம் மற்றும் அரிசி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீரில் 2 முறை நன்கு கழுவவும்.
இதற்கடுத்து குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கழுவி வைத்து உளுந்து அரிசியை போட்டு குக்கரை மூடாமல் வேகவிடுங்கள்.
இப்போது தேவையான அளவு உப்பு, துருவிய தேங்காய், பூண்டு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
சாதம் பாதியளவு வெந்ததும் குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுத்தால் உளுந்து சாதம் நன்றாக வெந்து தயாராகி இருக்கும்.
இறுதியாக அதன் மேல் மேலே நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால் சுவையான கருப்பு உளுந்து சாதம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |