இந்த மாவு இருந்தால் போதும்.., பத்தே நிமிடத்தில் மொறுமொறு வடை செய்யலாம்
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மழைநேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் வடை வைத்து சாப்பிடவே அவ்வளவு நிறைவாக இருக்கும்.
இந்த ஒரே ஒரு மாவு இருந்தால் போதும், 10 நிமிடத்தில் உடனடியாக சுவையான மொறுமொறு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 கப்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- கருவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுந்தை 2 -3 முறை நன்கு கழுவி காயவைத்துக் கொள்ளவேண்டும்.
பின் உளுந்தை மிக்ஸி ஜாரில் நன்கு பொடியாக அரைத்து சலித்து கொள்ளவேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்த மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி வடை மாவு போல் பிணைந்து வைத்துக்கொள்ளவும்.
கலக்கிய மாவை 15 நிமிடம் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.
பின் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து பிணைந்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கலந்து வைத்துள்ள மாவை வடை போல் தட்டி பொறித்து எடுத்தால் சுவையான உடனடி வடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |