தித்திக்கும் சுவையில் சத்தான இனிப்பு உளுந்து போண்டா.., எப்படி தயாரிப்பது?
Ulundu sweet bonda recipe in tamil- உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.
உளுந்து நம் உடலுக்கு அசுர பலத்தையும், உறுதியையும் தரக்கூடிய மிகச்சிறந்த பாரம்பரிய உணவுப் பொருளாகும்.
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
பொதுவாக, வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சத்தான இனிப்பு உளுந்து போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 கப்
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய்- 3
- தேங்காய் துருவல்- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுந்து நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துகொள்ள்வும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த உளுந்து, வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் சேர்த்து மாவை போண்டா போல் பொன்னிரமாக பொறித்து எடுத்தால் சுவையான இனிப்பு உளுந்து போண்டா தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |