நடிகர் விஜய் மகள் குறித்து ஆபாச பதிவு: விருது வாங்கிய அடுத்த நாளே கைதான பாஜக பெண்
தொடர்ந்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு வந்ததாக பாஜக ஆதரவாளர் உமா கார்கி என்ற பெண்ணை கோவை சைபர் க்ரைம் போலிசார் கைது செய்துள்ளனர்.
பாஜக ஆதரவாளரான உமா கார்கி, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
பாஜகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக திமுக தலைவர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்தும் டுவிட்டரில் அவதூறான கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
இதுதொடர்பாக கோவை வடக்கு மாவட்ட ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில், கோவை சைபர் க்ரைம் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே சமீபத்தில் நடிகர் விஜய் விருது வழங்கும் விழா குறித்தும் பதிவிட்டிருந்தார்.
அந்தவிழாவில் பேசிய நடிகர் விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து படிக்க சொல்லியிருந்தார்.
இதுகுறித்து பதிவிட்ட, மிக அவதூறான கருத்தை பதிவிட்டார், இந்நிலையில் இன்று காலை உமா கார்கியை போலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்றுமாலை நடந்த பாஜக கூட்டத்தில் உமா கார்க்கிக்கு சிறந்த ஊடக செயல்பாட்டாளர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கி பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திராவிட ஸ்டாக்குகளை கதறவிடும் அக்கா @Umagarghi26 அவர்கள் சிறந்த சமூக ஊடக செயல்பாட்டிற்காக பாராட்டு பெற்ற பொழுது pic.twitter.com/aZXmbRV6wR
— Selva Kumar (@Selvakumar_IN) June 19, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |