குட்டிக்கரணம் போட்ட ஸ்டம்ப்! இந்திய வீரரின் மின்னல் வேகப்பந்துவீச்சு..அதிர்ச்சியில் உறைந்த வீரர்களின் வீடியோ
இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் பந்துவீச்சில், அவுஸ்திரேலிய வீரர்களின் ஸ்டம்ப் காற்றில் பறந்தது.
அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள்
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நேற்றைய ஸ்கோர் 156/4-வுடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது.
அணியின் ஸ்கோர் 186 ஆக உயர்ந்தபோது ஹேண்ட்ஸ்கோம்ப் 19 ஓட்டங்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
பறந்த ஸ்டம்ப்
அதன் பின்னர் கிரீன் 21 ஓட்டங்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னில் இருந்தபோது, உமேஷ் யாதவ் வீசிய பந்து புயல்வேகத்தில் ஸ்டம்பை தாக்கியது. இதில் காற்றில் பறந்த ஸ்டம்ப் குட்டிக்கரணம் போட்டு கீழே விழுந்தது.
? Mitchell Starc CLEAN BOWLED! Lovely sound ?
— Broken Cricket Dreams Cricket Blog (@cricket_broken) March 2, 2023
Umesh Yadav with 100 wickets in #India. Class ????#CricketTwitter #IndvAus #AUSvsIND #BGT2023 pic.twitter.com/WgaJnNdhxp
அடுத்து களத்தில் இருந்த கேரியை தமிழக வீரர் அஸ்வின் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து முர்பியின் ஸ்டம்ப் உமேஷ் யாதவ் தெறிக்கவிட்டார். இதன்மூலம் அவர் இந்திய டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியதன் மூலம், அந்த அணி 197 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Another one for @ashwinravi99 as Alex Carey is trapped LBW for 3 runs.
— BCCI (@BCCI) March 2, 2023
Live - https://t.co/t0IGbs2qyj #INDvAUS @mastercardindia pic.twitter.com/BslxdjefkG
Bowled!@y_umesh cleans up Mitchell Starc and picks up his ?th wicket in India.
— BCCI (@BCCI) March 2, 2023
Well done, Umesh ??#INDvAUS pic.twitter.com/XNWhdTYQQ2
Umesh Yadav, you beauty ?
— BCCI (@BCCI) March 2, 2023
Todd Murphy is bowled for a duck.
Terrific bowling by @y_umesh
Live - https://t.co/t0IGbs2qyj #INDvAUS @mastercardindia pic.twitter.com/yvDiHfmkIv