ஜோ ரூட்டை இப்படி தான் ஏமாத்தி அவுட்டாக்கனும்! வந்தவுடனே செய்து காட்டிய உமேஷ்: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து அணியின் சிம்ம சொப்பமான விளங்கி வந்த ஜோ ரூட்டின் விக்கெட்டை வந்த முதல் போட்டியில் உமேஷ் யாதவ் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து மிரட்டியதுடன், இந்திய அணிக்கு பெரும் தலையை வலியை கொடுத்து வந்த ஜோ ரூட்டை, தான் வந்த முதல் போட்டியிலே உமேஷ் யாதவ் போல்டாக்கி வெளியேற்றினார்.
Umesh Yadav for you. #ENGvIND pic.twitter.com/0XgQaCYjxH
— CricTracker (@Cricketracker) September 2, 2021
இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே, உமேஷ் யாதவ் அசுரவேகத்தில் பந்து வீசின் வந்தார். குறிப்பாக ஒரு சில பந்துகள் எல்லாம் 140 கி.மீற்றர் வேகபத்தில் சென்றன. இதனால் நிச்சயமாக இவர் ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
அதன் காரணமாகவே கோஹ்லி இவரை கொண்டு வந்திருக்கலாம் என்று கூறப்பட்டது, அதன் படியே இன்ஸ்விங் மூலம் ஜோ ரூட்டை அழகாக ஏமாற்றி உமேஷ் யாதவ் அவுட்டாக்கினார்.
அதுவரை அவுட் ஸ்விங் போட்டு வந்த உமேஷ், திடீரென்று இன் ஸ்விங் போட்டதால், அந்த பந்தை தடுப்பதற்குள் அது போல்டாகிவிட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.