அஸ்வினின் செயலால் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கிய நடுவர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அஸ்வின் ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால் 5 ஓட்டங்கள் பெனால்டி வழங்கப்பட்டது.
ஜடேஜா 112
ராஜ்கோட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டம் நடந்து வருகிறது.
இந்திய அணி 445 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜடேஜா 112 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். துருவ் ஜுரேல் 46 ஓட்டங்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ஓட்டங்களும் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளும், ரெஹான் அகமது 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இன்னிங்சின் 102வது ஓவரில் இந்திய வீரர் அஸ்வின் ஆடுகளத்தில் நடுவில் ரன் ஓடினார். இதனால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நடுவரிடம் புகார் அளித்தார்.
சச்சின், பாண்டிங் என ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்த கேன் வில்லியம்சன்! 92 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த நியூசிலாந்து
பெனால்டி
ஏற்கனவே இதேபோன்ற செயலில் ஜடேஜா ஈடுபட்டதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே அஸ்வினின் தவறை சுட்டிக்காட்டிய நடுவர், ஆடுகளத்தை சேதப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாக கூறி இந்திய அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டி அறிவித்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி தனது இன்னிங்சை கூடுதல் 5 ஓட்டங்களுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
@X
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |