விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் துள்ளி ஓடிய பவுலரை மடக்கி தடுத்த நடுவர்! வைரலாகும் வீடியோ
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் துள்ளி ஓடிய பந்து வீச்சாளரை, போட்டி நடுவர் விளையாட்டாக மடக்கி பிடித்து தடுக்க முயன்ற சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெள்ளிக்கிழமை முல்தான் சுல்தான்கள் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் இடையே நடந்த போட்டியின் போது இச்சம்பவம் நடந்தது.
கிளாடியேட்டர்ஸ் இன்னிங்ஸின் 14வது ஓவரின் போது, முல்தான் வேகப்பந்து வீச்சாளர் Shahnawaz Dahani நான்காவது பந்தில் நசீம் ஷாவை போல்டு ஆக்கினார்.
விக்கெட் எடுத்த உற்சாகத்தில் Dahani, திரும்பி ரசிகர்களை நோக்கி துள்ளி ஓடினார்.
☝? #HBLPSL7 l #LevelHai l #MSvQG pic.twitter.com/kp8MPJDinT
— PakistanSuperLeague (@thePSLt20) February 18, 2022
இதன்போது போட்டி நடுவர் அலீம் தார் நகைச்சுவையாக Dahani-ஐ மடக்கி பிடித்து தடுக்க முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை.
நடுவரிடமிருந்து தப்பி ரசிகர்களுக்கு அருகே சென்ற Dahani, கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நடுவர் அலீம் சிரித்த படி சென்றார். குறித்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.