பவுலர் கேட்ச் பிடிக்கும்போது இடையூறு செய்த துடுப்பாட்ட வீரர்: அவுட் கொடுத்து அதிர்ச்சியளித்த நடுவர் (வீடியோ)
வங்காளதேச டி20 லீக் போட்டியில், கேட்ச் பிடிப்பது தடைப்பட்டதால் நடுவர் அவுட் கொடுத்த நிகழ்வு அரங்கேறியது.
BPL லீக் போட்டி
சில்ஹெட்டில் 9ஆம் திகதி நடந்த BPL லீக் போட்டியில் ஃபார்ட்டுன் பரிஷால் மற்றும் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஃபார்ட்டுன் பரிஷால் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் ரங்க்பூர் அணி சேஸிங்கில் இருந்தபோது 19வது ஓவரை ஜஹன்தாத் கான் வீசினார்.
We don’t see that too often! 👀
— FanCode (@FanCode) January 9, 2025
ICYMI: Mahedi Hasan was given out after his partner Nurul Hasan was found guilty of obstructing the field! 🫣#BPLOnFanCode pic.twitter.com/5DJuZr0Dwg
அந்த ஓவரின் 4வது பந்தை மெஹிதி ஹசன் எதிர்கொண்டு ரன் எடுக்க முயல, பந்துவீச்சாளரிடம் கேட்ச் ஆக சென்றது.
Obstructing the field
ஜஹன்தாத் கேட்ச் பிடிக்க சென்றபோது எதிர்முனையில் இருந்த துடுப்பாட்ட வீரர் நூருல், நேர்கோட்டில் ஓடுவதற்கு பதிலாக தனது திசையை மாற்றிக்கொண்டார். இதனால் ஜஹன்தாத் மீது லேசான மோதல் ஏற்பட்டது.
மேலும் ஜஹன்தாத் கேட்ச் பிடிப்பது தவறியது. பின்னர் அவர் நடுவரிடம் மேல்முறையீடு செய்தார்.
மூன்றாம் நடுவர் சோதித்த பின்னர் Obstructing the field நடந்துள்ளதைக் குறிப்பிட்டு மெஹிதி ஹசனுக்கு அவுட் கொடுக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |