மின்னல் வேகப்பந்துவீச்சு.. CSK-க்கு எதிராக சாதனை படைத்த இளம் வீரர்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்து வீசி சாதனை படைத்துள்ளார்.
24 வயதான உம்ரான் மாலிக் நடப்பு ஐபிஎல் தொடரில் புயல்வேகத்தில் பந்து வீசி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் இரண்டு முறை 154 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசினார்.
முதல் பந்தை ருதுராஜுக்கும், இரண்டாவது பந்தை டோனிக்கு 19வது ஓவரில் என இருமுறை 154 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதன் மூலம், அதிவேகத்தில் பந்துவீசிய பெர்குசனை உம்ரான் முந்தினார். குஜராத் அணியின் பந்துவீச்சாளரான பெர்குசன், அதிகபட்சமாக 153.9 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
இந்த சீசனில் உம்ரான் மாலிக் இதற்கு முன் 153.3 கி.மீ, 153.1 கி.மீ, 152.9 கி.மீ வேகத்தில் பந்து வீசியிருந்தார். உம்ரான் மாலிக் நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.