இலங்கை கேப்டனை வீழ்த்திய அசுர வேகம்! இளம் வீரர் படைத்த சாதனை
இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், நேற்றைய போட்டியில் அதிவேகமாக பந்துவீசி பும்ராவின் சாதனையை முறியடித்தார்.
இந்திய அணி வெற்றி
மும்பையில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா இந்திய அணிக்கு அச்சறுத்தலாக இருந்தார். அவர் 27 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசியிருந்தார்.
இலங்கை அணியின் ஸ்கோர் 129 ஆக இருந்தபோது, ஷனகாவின் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வீழ்த்தினார்.
Umran Malik on Fire?
— NAFISH AHMAD (@nafeesahmad497) January 3, 2023
Umran malik took wicket of Dashun Shanaka by bowling at 155 Km.. OMG! #UmranMalik #INDvSL pic.twitter.com/yqVeADBUxV
அசுர வேகம்
அப்போது அவர் 155 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசியிருந்தார். இதன்மூலம் அபாரமான சாதனையை உம்ரான் படைத்தார். 153.36 கிலோ மீற்றர் வேகத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா வீசிய பந்துவீச்சு தான் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் சாதனையாக இருந்து வந்தது.
@Bcci
அதனை தற்போது உம்ரான் மாலிக் முறியடித்துள்ளார். பும்ராவுக்கு அடுத்தபடியாக ஷமி (153.3 கி.மீ), நவ்தீப் சைனி (152.85) உள்ளனர்.
இந்த நிலையில் உம்ரானின் பந்துவீச்சை முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார். அவரது பதிவில், 'உம்ரான் மாலிக் நெருப்பை மட்டும் உமிழவில்லை, அவரது Line மற்றும் Length இரண்டையும் மேம்படுத்தியுள்ளார்' என தெரிவித்துள்ளார்.