காற்றில் பறந்த ஸ்டம்ப்.. பஞ்சாபை தெறிக்கவிட்ட வேகப்புயல் உம்ரான்! வீடியோ
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பையில் நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் தவான் 8 ஓட்டங்களில் புவனேஷ்வர் குமார் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, லிவிங்ஸ்டன் மட்டும் அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடி அவர் 33 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஜிதேஷ் சர்மாவின் விக்கெட்டை முதலில் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து ஓடியன் ஸ்மித்தை அவுட்டாக்கிய மாலிக், அடுத்தடுத்து ராகுல் சாகர், அர்ஷிதீப் சிங் இருவரையும் கிளீன் போல்டாக்கினார்.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 151 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
https://www.iplt20.com/video/43057/m28-pbks-vs-srh--rahul-chahar-wicket?tagNames=2022