புயல் வேகப்பந்துவீச்சுக்கு விருது.. மிரட்டும் இளம் வீரர்!
ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் நேற்றைய போட்டியில் அதிவேகமாக பந்துவீசியதற்காக விருது பெற்றார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணியில் விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், நேற்றைய போட்டியில் 153.3 கி.மீ வேகத்தில் பந்துவீசி மிரட்டினார். இதற்காக Fastest Delivery of The Match என்ற விருதினை அவர் பெற்றார்.
மற்ற அணிகளில் உள்ள வீரர்கள் 140 கி.மீ வேகத்தில் பந்து வீசவே தடுமாறி வரும் நிலையில், உம்ரான் மாலிக் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் தான் சாதாரணமாக பந்துவீசி வருகிறார்.
Umran Malik begs his 4th consecutive fastest delivery award. Tonight for clocking 153.3kmph. pic.twitter.com/6OIBOn2N8p
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 11, 2022
இந்த சீசனில் வேகமாக பந்து வீசிய முதல் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் உம்ரான் மாலிக்கின் பெயரே இருக்கிறது. இவர் குறைந்தபட்சமாக 110 கி.மீ வேகத்திலும் பந்துவீசக்கூடியவர் ஆவார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு பெருகியுள்ளது.
உம்ரான் மாலிக் குறித்து இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறுகையில், 'உம்ரான் மாலிக்கை கவுண்டி கிரிக்கெட்டில் ஆட வைத்து பிசிசிஐ தயார் படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.