பருவநிலை அபாய எல்லையை தொட்டுவிட்டது: பிரித்தானிய ஆய்வாளர்கள் குழு கவலை
பருவநிலை மாற்றமானது வரும் காலங்களில் உயிர்களின் வாழ்வு, உலகத்தின் சுற்றுசூழல் மனிதர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை அதிக அளவில் பாதிக்கும் என பிரித்தானிய அரசுகளுக்கு இடையே ஆன பருவநிலை ஆராய்ச்சி குழு எச்சரித்துள்ளது.
பிரித்தானிய அரசுகளுக்கு இடையே ஆன பருவநிலை ஆராய்ச்சி குழு வரும் திங்கள்கிழமை கூடவுள்ள நிலையில் அந்த குழுவில் இடம்பெற்றுள்ள பருவநிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டு வரவிருக்கும் பருவநிலை அறிக்கையானது அறிவியல் மொழியால் எழுதப்பட்ட வறண்ட கனவுக்கான வார்த்தைகளாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
100கும் மேற்பட்ட பருவநிலை ஆராச்சியாளர்கள் குழுவால் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பருவநிலை அறிக்கையானது வெளியிடப்படும். மூன்று கட்டங்களாக வெளியிடப்படும் இந்த பருவநிலை அறிக்கையில்,முதல் அறிக்கையானது கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் மனிதர்கள் மற்றும் இந்த புவிக்கோளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், அதிகரித்துவரும் சூரிய வெப்ப அலைகள், அழிந்துவரும் உயிரினங்கள் அதிகரித்து கொண்டு வரும் இயற்கை சீற்றங்கள் போன்றவை எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பல உயிரினங்கள் அழிவின் எல்லை கோட்டை தொட்டுவிட்டதாகவும், இது மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொன்றுவரும் எனவும் எச்சரித்தது.
இந்த முதல் அறிக்கையானது பருவநிலை மாற்றத்தால் உலகில் ஏற்பட்டுள்ள பூமியின் இயற்பியல் மாற்றத்தை எடுத்துரைத்ததை தொடர்ந்து பிரித்தானிய நாடுகளை பருவநிலை சிகப்பு குறியீடு என்ற எச்சரிக்கையை அறிவிக்க தூண்டியது.
இந்த நிலையில் வரும் மார்ச் மாதம் இந்த அறிக்கையின் மூன்றாவது பகுதி வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில் வரவிருக்கும் அறிக்கையானது அறிவியல் மொழியால் எழுதப்பட்ட வறண்ட கனவுக்கான வார்த்தைகளாக இருக்கும் என ஆக்ஷன் எய்ட் இன்டர்நேஷனலில் நிறுவனத்தில் காலநிலை நீதி பிரச்சினைகளுக்கு தலைமை தாங்கும் தெரசா ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிக்கையானது சில தொழில்நுட்ப திருத்தங்கள் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்றவற்றை இவரு எதிர்கொள்ளவது போன்ற வழிமுறைகள் இந்த அறிக்கையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு செயல்படாவிட்டால் விரைவில் உலகின் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள சிலநாடுகளை இழந்துவிடுவோம் என்றும், டைனோசர் இனங்களை போல் உலகத்தின் பல உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழியக்கூடும் என்றும் ஆராச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் இந்த பருவநிலை மாற்றத்தை சரி செய்வதற்கு அமைப்புகளில் மாற்றங்களை அதிகரிப்பது மட்டும் போதாது, ஒட்டுமொத்த அமைப்பைகளையே மாற்றம் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.