இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்! வெளியான அதிமுக்கிய தகவல்
இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், 47 உறுப்பு நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பாக இது நடைபெற்றது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக் கோரியது
எவ்வாறிருப்பினும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
அதேநேரம், இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா தீர்மானித்துள்ளதாக ஜெனீவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
- ஆதரவாக 22
- எதிராக 11
-
புறக்கணிப்பு 14